புதன், 12 அக்டோபர், 2011

முஸ்லிம் தேசியத்தை வலியுறுத்தியுள்ள தேர்தல் முடிவுகள்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காகவும், தமக்கான ஒரேயொரு குரல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை வலுப்படுத்தி நிரூபணம் செய்ய ஜனநாயக ஆயுதமான வாக்குகள் மூலம் கடந்த தேர்தல்களில் எடுத்துக் காட்டினர்.அதே போன்றே முஸ்லிம் தேசியத்தை வலியுறுத்தியும், எமது ஒரே குரல் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை நிரூபணம் செய்தும் கல்முனை மாநகர சபைத்தேர்தலில் முஸ்லிம் மக்கள் வாக்களித்துள்ளனர்.
இவ்வாறு அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவரும், முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீட உறுப்பினரும், கட்சியின் கல்முனை மாநகரசபைத் தேர்தல் கண் காணிப்புக் குழு உறுப்பினருமான எஸ்.எல்.எம். ஹனிபா மதனி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
நாட்டில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான மூன்றாம் கட்டத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.முஸ்லிம்களுக்கான தென்கிழக்கு அலகின் முக்கிய தலைநகராகக் கருதப்படும் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளுக்கப்பால் முஸ்லிம் மக்கள் ஐக்கியத்தைக் கடைப்பிடித்து நமது தேசிய விடுதலை இயக்கமான முஸ்லிம் காங்கிரஸை அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெறச் செய்துள்ளதுடன், மாநகர ஆட்சியில மர்த்தி வரலாற்றுச் சாதனையையும் நிலை நிறுத்தியுள்ளனர்.
நாட்டில் யுத்தம் மௌனித்து இனப்பிரச்சினைக்கான பேச்சு தொடரும் இந்தச் சந்தர்ப்பத்தில், முஸ்லிம் சமூகமும் இந்த பேச்சில் நிச்சயம் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற செய்தியை கல்முனை மாநகர சபைத்தேர்தல் முடிவுகள் இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் உரத்துக் கூறியுள்ளன.
இந்த வெற்றி கல்முனை மாநகரம் வாழும் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கௌரவப்படுத்தியுள்ள தீர்க்க தரிசனமிக்க சாதனை வெற்றியாகும்.வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காகவும், எமக்கான ஒரேயொரு குரல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை வலுப்படுத்தி நிரூபணம் செய்ய ஜனநாயக ஆயுதமான வாக்குகள் மூலம் கடந்த தேர்தல்களில் எடுத்துக் காட்டினர்.அதே போன்றே முஸ்லிம் தேசியத்தை வலியுறுத்தியும், எமது ஒரே குரல் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை நிரூபணம் செய்தும் கல்முனை மாநகர சபைத்தேர்தலில் முஸ்லிம் மக்கள் வாக்களித்துள்ளனர்.எனவே இந்த வரலாற்றுப் பெருமைமிக்க வெற்றியை ஈட்டித்தந்துள்ள கல்முனை மாநகரம் வாழ் முஸ்லிம் மக்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவிக்க முஸ்லிம் சமூகம் கடமைப்பட்டுள்ளது
எஸ்.எல்.எம். ஹனிபா மதனி
அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவரும்,
முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீட உறுப்பினரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக