ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெருசலதிற்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச மாநாடு

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித ஜெருசலதிற்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. அரபு லீக் அனுசரனையுடன் கட்டார்தலைநகர் டோஹாவில் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெருசலதிற்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் மஸ்ஜிதுல் குதுஸ், மீதான அத்துமீறல்கள், மற்றும் இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளால் புனித ஜெருசலம் நகரில் சுகாதார, கல்வி துறைகளில் ஏற்பட்டு வரும் தாக்கம் தொடர்பிலும் ஏனைய அத்துமீறல்கள் தொடர்பிலும் அங்கு ஆராயப்படவுள்ளது என்று ஆரம்பகட்ட செய்திகள் தெரிவிக்கின்றது.

புதன், 26 அக்டோபர், 2011

இலங்கையின் ஹஜ்ஜாஜிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

சவூதி அரேபியாவின் மத விவகார, இஸ்லாமிய விவகார, கலாசார அலுவல்கள் பதில் அமைச்சர் டாக்டர் அம்மாரை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்த போது சந்திந்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது எதிர்காலத்தில் இலங்கையின் ஹஜ்ஜாஜிகளினுடைய எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும், பள்ளிவாசல், ஏனைய நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பாகவும், மத விவகார நடவடிக்கைகளுக்கு அதிக பங்களிப்புகளை வழங்குமாறும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பதில் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில் அமைச்சர் இணக்கம் தெரிவித்ததோடு, இது தொடர்பாக விஷேட குழுவொன்றை நியமித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இச்சந்திப்பின் போது சவூதி அரேபியாவுக்கான இலங்கை நாட்டு தூதுவர் அஹ்மத் ஜவாத்தும் கலந்துகொண்டார்.

சனி, 22 அக்டோபர், 2011

முஸ்லிம்கள் ஏகாதிபத்திற்கு எதிராக ஒன்றிணையவேண்டு

ஏகாதிபத்திய நாடுகள் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளைக் கங்கணம்கட்டிக்கொண்டு முன்னெ டுக்கும் நடவடிக்கையின் ஒரு வெளிப்பாடே முஅம்மர் கடாபியின் படுகொலை அமைந்துள்ளதென மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்துள்ளார்.
கடாபியின் இழப்பானது முஸ்லிம் நாடுகளுக்கு மாத்திரமன்றி உலகத் துக்கே ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டார். கடாபியின் கொலை தொடர்பாக வெளியிட்டிருக்கும் அனுதாபச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப் பிட்டுள்ளார். கடாபி சிறந்ததொரு வீரர் மாத்திரமன்றி, ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய முக்கியமானதொரு சிறந்த தலைவர். இவரின் இழப்பானது பேரிழப்பாகுமெனவும் அலவி மெளலானா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடாபியின் இழப்பைத் தொடர்ந்து, முஸ்லிம் நாடுகள் யாவும் ஐக்கியப்பட்டு ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டுமென்ற அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் சீ. ஐ. ஏ.யினரின் நடவடிக்கையாலேயே கடாபி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை நாம் கண்டிக்கின்றோம்.
இறைவனுடைய பெயரால் முஸ்லிம் நாடுகளிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதன், 19 அக்டோபர், 2011

மக்காவில் மற்றுமொரு இலங்கை ஹஜ்ஜாஜி மரணம்

மாத்தளை தரலந்த எனுமிடத்தைச் சேர்ந்த அப்துல் அஸீஸ் முஹமட் அஸ்வர் (69) மக்காவில் மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வருடம் புனித ஹஜ் கடமைக்காகச் சென்ற இவர் நேற்று (18) அதிகாலை நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்ததாகவும் அவரின் ஜனாஸா நல்லடக்கம் மக்காவில் இடம்பெற்றதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே இலங்கை கண்டியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கடந்தவாரம் மக்காவில் வாகன விபத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இவருடன் இம்முறை இலங்கையைச்சேர்ந்த மூவர் மக்காவில் மரணமாகியுள்ளர்

முஸ்லிம் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வர்த்தகரை ஏன் கைது செய்யவில்லை?

கண்டி அம்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகரை இது வரை ஏன் கைது செய்யவில்லை என நேற்று இடம்பெற்ற பல்லேகல பிரதேச சபை அமர்வின் போது கேள்வி எழுப்பப்பட்டது. பல்லேகல நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினரான குணதிலக ராஜபக்ஷவே இந்த விடயம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
குறிப்பிட்ட சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பிரபல வர்த்தகரைப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனறு தெரிவித்த அவர், இந்தப் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் பொலிஸில் ஏலவே முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் குறிப்பிட்ட வர்த்தகருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார் – ஸ்ரீலங்கா மிரர் கிருபா

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

முஸ்லிம்கள் எங்களுக்கு புரியாணி தருவார்கள் வாக்குத் தரமாட்டார்கள்:ஜனாதிபதி

கொழும்பு தேர்தல் முடிவு பற்றி நீங்கள என்ன கூறுகிறீர்கள் என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்டபோது பதிலளித்த ஜனாதிபதி நீங்கள் எதனை கூறுகிறீர்களோ அதனையே நானும் கூறுகிறேன். கொழும்பின் முடிவு இப்படி அமையும் என்பது எனக்கு முன்பே தெரியும். முஸ்லிம்கள் எங்களுக்கு புரியாணி தருவார்கள் வாக்கு தரமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது குறுக்கிட்ட முஸ்லிம் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கொழும்பு தவிர்ந்த பகுதிகளில் முஸ்லிம்கள் கணிசமாக ஆளும் கட்சிக்கு வாக்களை வழங்கியுள்ளார்கள். காலி நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் ஆளும் கட்சில் முஸ்லிம் வேட்பாளர்கள் பட்டியலின் ஆரம்பதிற்கே தெரிவாகியுள்ளார்கள் என்று தெரிவித்தபோது. அங்கெல்லாம் நிலைமை வேறு என்று குறிபிட்ட ஜனாதிபதி அம்பாந்தோட்டையில் ஆறு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினோம் பலர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை . பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நடை பெற்று முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 28 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அம்பாந்தோட்டையில் மாநகர சபைக்கான தேர்தலில் ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இதில் மூன்று பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவாகியுள்ளனர். என்பது குறிபிடத்தக்கது.
நடை பெற்று முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மொத்தமாக 420 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இதில் 70 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து 16 உறுபினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து ) 28 முஸ்லிம் உறுபினர்களும் , ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 25 முஸ்லிம் உறுபினர்களும் , ஐக்கிய ஜனநாயக முன்னணியி 01 முஸ்லிம் உறுபினருமாக 70 பேரே தெரிவாகியுள்ளனர்.
இதில் கூடிய முஸ்லிம் உறுப்பினர்களை பெற்றுகொண்டுள்ள கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே உள்ளது என்பது குறிபிடதக்கது .

சனி, 15 அக்டோபர், 2011

ஹஜ் கட்டண உச்சத் தொகையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை

ஹஜ் கட்டண உச்சத் தொகையான 3 இலட்சத்து 40ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக அறவிடும் ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு எதிராக ஹஜ்ஜாஜிகள் தங்களுக்கு முறைப்பாடு செய்தால், அந்த முறைப்பாடுகள் குறித்து ஒரு குழுவை நியமித்து தக்க விசாரணைகள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர்கள் கூடுதலான தொகையை அறவிட்டிருப்பது இந்த குழுவின் விசாரணையின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக
அதேவேளை ஆளுனர் அலவி மெளலானா தெரிவித்துள்ள தகவலில் ஹஜ் பயண முகவர்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியம். இந்த சந்தர்ப்பத்தில் அதிக இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது. இது எமது சமயக் கடமை. அதை நிறைவேற்றச் செல்லுவதற்காக கட்டணத்தை இலகுபடுத்திக் கொடுப்பது முகவர்களின் பொறுப்பு.
இதை விடுத்து ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்பவர்களிடம் அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு மேலதிகமாக அறவிடும் ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த முறை அவர்களுக்கான லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று தெரிவத்துள்ளார்

வியாழன், 13 அக்டோபர், 2011

மரணம் சுவாசித்தோர் மகிமை சொல்லுவோம்..!!

யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வேண்டுகோள்: யாழ்ப்பாண முஸ்லிம் சமூகமானது இழப்புகள் பல சந்தித்த ஒரு சமூகம். குறிப்பாக தமிழர் விடுதலைக்காக எப்போது தமிழ் ஆயுத அமைப்புக்கள் ஆயுதம் ஏந்தினவோ அன்றிலிருந்து யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும் நெருக்குவாரங்கள் ஏற்படத்தொடங்கியது.
தமிழ் இயக்கங்கள், இந்திய இராணுவம், அரசாங்கப் படைகள் மற்றும் புலிகள் என அத்தனை தரப்பாருமே யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கெதிரான அநியாயங்களை அரங்கேற்றியுள்ளனர்.
யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கெதிரான இந்த அநியாயங்கள் மூலம் நமது சமூகம் பெறுமதிமிக்க பல உயிர்களை பல்வேறு காலகட்டங்களில் இழந்துள்ளது. இதில் ஜலீல் மாஸ்டர், வெள்ளை, ஜெலீஸ் என இன்னும் பலர் அடங்குவர். விமானத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு, காணாமல் போனமை, புலிகளின் தண்டனை, புலிககளின் மூளைச்சலவைக்கு உட்பட்டு மரணத்தை தழுவியமை என பல்வேறு வகையாகவும் இந்த மரணங்களை வகுக்கலாம்.
இந்த மரணங்களையும், இதில் மரணமடைந்தவர்களை எப்போதும் எம் நினைவில் வைத்திருப்பது நிகழ்கால யாழ்ப்பாண சமூகத்தினதும், ஒவ்வொரு தனிநபரினதும் பிரதான கடமையாகிறது.
அந்தவகையில் வடக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்குள்ளான இந்த ஒக்டோபர் மாதத்தில் அக்கிரமங்கள் மூலமாக மரணத்தை சுவாசித்த யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகளை நினைவுகூற யாழ் முஸ்லிம் வலைத்தளம் தீர்மானித்துள்ளது.
உங்களிடத்தில் அவ்வாறு மரணத்தை சுவாசித்த யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகளின் புகைப்படங்கள், அவர்களுடனான அனுபவங்கள், அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் மற்றும் திறமைகள் இருப்பின் சமூக நலன்கருதி தயவுசெய்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மரணத்தை சுமந்த அந்த உறவுகளின் மகிமையை இந்த உலகிற்கு அறியச்செய்யவும், அவர்களின் தியாகங்களை யாழ்ப்பாண இளம் சந்ததியினர் அறிந்துகொள்ளவும் நிச்சயம் எமது முயற்சி உதவும்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இணையத்தள வசதியற்ற, உற்ற உறவுகளை இழந்த, முதியவர்கள் மற்றும் அத்தனை பேருக்கும் இந்த தகவலை கொண்டுசெல்லுங்கள்.
அல்லாஹ் எமது நேர்மையான நோக்கத்தை ஏற்றுக்கொள்ளட்டும்..!!

புதன், 12 அக்டோபர், 2011

முஸ்லிம் தேசியத்தை வலியுறுத்தியுள்ள தேர்தல் முடிவுகள்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காகவும், தமக்கான ஒரேயொரு குரல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை வலுப்படுத்தி நிரூபணம் செய்ய ஜனநாயக ஆயுதமான வாக்குகள் மூலம் கடந்த தேர்தல்களில் எடுத்துக் காட்டினர்.அதே போன்றே முஸ்லிம் தேசியத்தை வலியுறுத்தியும், எமது ஒரே குரல் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை நிரூபணம் செய்தும் கல்முனை மாநகர சபைத்தேர்தலில் முஸ்லிம் மக்கள் வாக்களித்துள்ளனர்.
இவ்வாறு அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவரும், முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீட உறுப்பினரும், கட்சியின் கல்முனை மாநகரசபைத் தேர்தல் கண் காணிப்புக் குழு உறுப்பினருமான எஸ்.எல்.எம். ஹனிபா மதனி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
நாட்டில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான மூன்றாம் கட்டத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.முஸ்லிம்களுக்கான தென்கிழக்கு அலகின் முக்கிய தலைநகராகக் கருதப்படும் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளுக்கப்பால் முஸ்லிம் மக்கள் ஐக்கியத்தைக் கடைப்பிடித்து நமது தேசிய விடுதலை இயக்கமான முஸ்லிம் காங்கிரஸை அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெறச் செய்துள்ளதுடன், மாநகர ஆட்சியில மர்த்தி வரலாற்றுச் சாதனையையும் நிலை நிறுத்தியுள்ளனர்.
நாட்டில் யுத்தம் மௌனித்து இனப்பிரச்சினைக்கான பேச்சு தொடரும் இந்தச் சந்தர்ப்பத்தில், முஸ்லிம் சமூகமும் இந்த பேச்சில் நிச்சயம் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற செய்தியை கல்முனை மாநகர சபைத்தேர்தல் முடிவுகள் இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் உரத்துக் கூறியுள்ளன.
இந்த வெற்றி கல்முனை மாநகரம் வாழும் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கௌரவப்படுத்தியுள்ள தீர்க்க தரிசனமிக்க சாதனை வெற்றியாகும்.வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காகவும், எமக்கான ஒரேயொரு குரல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை வலுப்படுத்தி நிரூபணம் செய்ய ஜனநாயக ஆயுதமான வாக்குகள் மூலம் கடந்த தேர்தல்களில் எடுத்துக் காட்டினர்.அதே போன்றே முஸ்லிம் தேசியத்தை வலியுறுத்தியும், எமது ஒரே குரல் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை நிரூபணம் செய்தும் கல்முனை மாநகர சபைத்தேர்தலில் முஸ்லிம் மக்கள் வாக்களித்துள்ளனர்.எனவே இந்த வரலாற்றுப் பெருமைமிக்க வெற்றியை ஈட்டித்தந்துள்ள கல்முனை மாநகரம் வாழ் முஸ்லிம் மக்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவிக்க முஸ்லிம் சமூகம் கடமைப்பட்டுள்ளது
எஸ்.எல்.எம். ஹனிபா மதனி
அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவரும்,
முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீட உறுப்பினரும்

கைதிகள் பரிமாற்றத்தை ஹமாசும் இஸ்ரேலும் உறுதி செய்தன


கிலாத் சாலித்தின் விடுதலைக்கு பதிலாக 1,072 பலஸ்தீனியர்களை விடுவிப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து ஜெரூசலத்திலும் காஸாவிலும் குதூகலம்.
கைதிகள் பரிமாற்றம் தொடர்பான உடன்பாடு பற்றிய அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து காசா முனையிலும் ஜெரூசலத்திலும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகளைக் காணக்கூடியதாக இருந்தது.
நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட இவ்வுடன்பாட்டின் படி ஐந்து வருடத்துக்கும் அதிகமாக சிறைவைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேல் படை வீரரான கிலாத் சாலித்தின் விடுதலைக்குப் பகரமாக ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
2006ம் ஆண்டு எல்லை தாண்டிய தாக்குதல் ஒன்றின் போது சாலித் ஹமாசினால் பிடிக்கப்பட்டிருந்தார். சில நாட்களில் அவர் விடுவிக்கப்படுவார் என் அப்போது இஸ்ரேலியர்கள் தெரிவித்திருந்தனர்.
26 அமைச்சர்கள் ஆதரவாகவும் மூவர் எதிராகவும் வாக்களித்த பின்னிரவு அமைச்சரவைக் கூட்டமொன்றைத் தொடர்ந்து இஸ்ரேலிய அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியது.
சிரியாவின் டமாஸ்கஸ் நகரிலிருந்து தொலைபேசியில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட உரை ஒன்றில் ஹமாஸ் தலைவர் காலித் மெஷால் இந்த விடயத்தை உறுதி செய்தார். அவ்வுரையில் “இது நாம் பெருமைப்பட வேண்டிய தேசிய அடைவாகும்” என்றார் அவர்.
இவ்வுரையைத் தொடர்ந்து காசாவின் இடம்பெயர்ந்தோர் முகாமான ஜபலியாவின் வீதிகளில் திரண்ட பலஸ்தீனியர்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தும் முகமாக துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்ததையும் கார்களின் Horn ஒலிகளை எழுப்பியதையும் கேட்க முடிந்ததாக அல் ஜசீறாவின் நிகோல் ஜோன்ஸ்டன் தெரிவித்தார்.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

Israel and Hamas reach deal: Shalit, 1,000 Palestinian prisoners to be released


Israel and Hamas have reached a deal to secure the release of captive IDF soldier Gilad Shalit, in exchange for 1,000 Palestinian prisoners held in Israeli jails. Shalit, who was abducted in a cross-border raid while serving in a tank unit near the Gaza Strip, has been in Hamas captivity for more than five years.
Aviva and Noam Shalit, parents of Gilad in June 2010 (photo: Itzik Edri)
Since his abduction in June 2006, ongoing negotiations for his release have broken down on multiple occasions. The terms of the current deal, which will see the release of numerous high profile Palestinian prisoners, are said to be nearly identical to those refused by Prime Minister Benjamin Netanyahu in the past.
The Israeli government met for a special session on Tuesday evening and was set to vote on the deal, which was mediated by Egyptian and German government officials. According to the Israeli news site Ynet, the eight senior cabinet ministers – comprising Israel’s top decision-making forum – approved the deal on Monday, rendering the government vote a formality.
According to media reports, several hundred of the prisoners will be released to Egypt, and the rest to the West Bank and Gaza. Popular Fatah leader Marwan Barghouti, who was sentenced to five life terms for his involvement in attacks on Israelis during the second Intifada, was initially said to be among the list of prisoners included in the deal, but Channel 10 later reported he would not be released. Other high profile leaders to remain in prison, despite long-standing Hamas demands, include Hamas leader Abdallah Barghouti and PFLP Secretary-General Ahmed Saadat.
In a televised announcement on Tuesday evening, exiled Hamas political leader Khaled Meshal said that a total of 1,000 male prisoners would be released, in addition to 27 women – reportedly all of the Palestinian women imprisoned in Israel. He said that the release would be carried out in two stages, the first of which would see 450 prisoners freed within a week, with the second carried out in two months. Israel’s Channel 10 reported that six Arab citizens of Israel would be among those released.
Israel recently toughened the conditions of the roughly 5,200 Palestinian prisoners held in Israeli jails, in what it presented as a bid to pressure Hamas to release Shalit. Hundreds of prisoners have launched a hunger strike in recent days in protest.

கருப்பு ஒக்டோபர் அகவை 21

ஒக்டோபர் இலங்கை வரலாற்றில் இருண்ட கருப்பு பக்கங்களை கொண்டுள்ள மாதமாகும். ஒக்டோபர் 1990 ஆம் ஆண்டில்தான் வடமாகாண முஸ்லிம்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு விடுதலை புலிகளினால் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒக்டோபருடன் இனச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது 21 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரங்கள் அரங் கேற்றப்பட்டு அவர்களின் அசையும் அசையா சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் அவர்களின் தாயக பூமியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
அதன் தாக்கங்கள் இன்றும் மாறாத காயங்களுடன் அப்படியே இருக்கிறது. ஆனால் இது தொடர்பான விழிப்புணர்வு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் போதுமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை அதன் விளைவைத்தான் வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் எந்த ஆக்கபூர்வமான கொள்கை மற்றும் நடவடிக்கை இன்றி இருப்பது தெளிவுபடுத்துகின்றது. சர்வதேசம் இது பற்றி போதுமான தகவல்கள் இன்றி இருப்பது ஆச்சரியம் தந்தாலும் அதுதான் உண்மை.
தற்போது பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளது அரசியல் பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளது ஆனால் முஸ்லிம் தரப்பு உள்வாங்கப்படவிலை. வடக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ௨௧ ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மீள்குடியேற்றம் வடக்கின் நகரங்களின் மத்தியில் அமைந்துள்ள முஸ்லிம் பிரதேசங்களின் வீதிகளிலும் , வீடுகளிலும் வீதிகளையும் வீடுகளையும் பிளந்து கொண்டும் காடுகளாக முளைத்துள்ள மரங்களை வெட்டி பிரதேசத்தை சுத்தப்படுத்தி பாதைகளை ஏற்படுத்தியதுடன் நின்றுவிட்டது. பல தடைகளையும் மீறி மீள் குடியேறும் முஸ்லிம் குடும்பங்கள் வடக்கின் அரச அதிகாரிகளினால் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுப்பதாக மீள் குடியேற சென்றுள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கருப்பு ஒக்டோபர் மாதமான இந்த மாதத்தில் கருப்பு ஒக்டோபர் தொடர்பான பல தகவல்களையும் , கட்டுரைகளையும் நாம் வழங்க எதிர்பார்த்துள்ளோம். இது தொடர்பான தகவல்கையும் செய்திகளையும் வாசகர்களும் எமக்கு தந்து உதவமுடியும் என்பதையும் அறியத்தருகிறோம்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தை புறக்கணிக்கும் இந்தியா..?

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய உயர் அதிகாரிகள் குழு பல அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத தமிழ் கட்சிப் பிரதிநிதிகளையும் இந்திய குழுவினர் சந்தித்துள்ளனர். வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியைக்கூட இந்தியக் குழுவினர் சந்தித்து உள்ளனர்.
தற்போது சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த இந்தியாவின் மற்றுமொரு உயர்மட்டக் குழுவினரும் இவ்வாறே உள்ளுர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர்.
இருந்தபோதும் இந்திய தரப்பினர் இலங்கை முஸ்லிம்களின் எந்தவொரு அரசியல் பிரதிநிதிகளையும் அப்போதும் சந்திக்கவில்லை.
இலங்கை முஸ்லிம்களின் அதிகப்பட்ச ஆதரவைப் பெற்றதாக கூறப்படும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளைக்கூட இந்திய தரப்பினர் சந்திக்கவில்லை. இதுகுறித்து முஸ்லிம் காங்கிரஸ் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்ததுடன், முஸ்லிம் சார்பு ஊடகங்களும் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தன.
இலங்கை முஸ்லிம்களின் அதிருப்தியை இந்தியா உரியமுறையில் உள்வாங்கியிருப்பின் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் தலைமையிலான குழுவினரை சந்திப்பதற்கு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனாலும் அந்த வாய்பபை இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்காமை காரணமாக இந்தியா இலங்கை முஸ்லிம்களை திட்டமிட்டுத்தான் புறக்கணிக்கிறது என்ற விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் எப்போது அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டதோ அப்போதிருந்தே இலங்கை வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்து வருகின்றமையை நோக்கமுடிகிறது.
இதன்மூலம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை இந்திய விரும்பாமையால்தான் இவ்வாறு முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்காமல் தவிர்த்து வருகிறதாவென்ற கேள்வி இங்கு மேலோங்குகிறது.
அல்லது இலங்கை முஸ்லிம்களுக்கு எத்தகைய பிரச்சினைகளும் இல்லை என்றடிப்படையில் இந்தியா செய்றபடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
இருந்தபோதும் இந்தியா இவ்வாறு இலங்கை முஸ்லிம்களை தொடர்ந்து புறக்கணிக்கின்றமையும், இலங்கை முஸ்லிம்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை செவிமடுக்க மறுப்பதும் இலங்கை முஸ்லிம்களிடையேயே இந்தியா குறித்த தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தவே செய்யும். இந்தியாவின் அண்மைக்கால செயற்பாடுகள் காரணமாக உள்நோக்கம் கொண்டு இந்தியா, செயற்படுகிறதாவென்ற பரவலான சந்தேகமும் இலங்கை முஸ்லிம்களில் ஒரு தரப்பினரினரிடம் ஏற்படுட்டுள்ளது.
இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் முஸ்லிம்கள் கண்காணிக்கப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும், இந்தியாவின் உட்துறை அமைச்சர் சிதம்பரம், பாகிஸ்தான சார்பு அமைப்புக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு இலங்கையை நுழைவாயிலாக பயன்படுத்துவதாக கூறியிருந்த நிலையிலும் இந்தியாவின் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான நகர்வுகள் உற்றுநோக்கப்படவேண்டியவை.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் சனத்தொகை கணக்கெடுக்கின்படி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களே பெரும்பான்மை என்ற உண்மை பகிரங்கப்படுத்தப்படுமென அமைச்சுர் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நிலையில் இலங்கையின் வடகிழக்கு மகாணத்தில் தமது பிடி தளர்ந்துவிடுமோவென்ற அச்சம் காரணமாகவும் இலங்கை முஸ்லிம்கள் மீதான புறக்கணிப்பை இந்தியா மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் நாம் மறுப்பதற்கில்லை.
பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் நாட்டை பிரிக்க பங்காற்றியமை, காஸ்மீர் பகுதியில் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு, இந்தியா முஸ்லிம்களுக்கெதிரான குற்றம் புரிந்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தாமை, இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இலங்கை முஸ்லிம்களை முற்றாக புறக்கணித்தமை, ஆப்கானிஸ்தானில் எழும் எத்தகைய இஸ்லாமிய சார்பு அரசையும் வீழ்த்துவதற்காக ஹமீத் ஹர்சாயுடன் அண்மையில் செய்த ஒப்பந்தம் என இந்தியாவின் முஸ்லிம் உம்மாவிற்கெதிரான வெளிப்படை அநியாயங்களை இலங்கை முஸ்லிம் சமூகம் கவனத்திற்கொள்வதும் இங்கு சிறந்ததாக அமையும்.
இந்தியா முஸ்லிம் உம்மாவிற்கெதிராக மேற்கொண்ட இந்த அநியாயங்களை மற்றுமொரு வகையில் இலங்கை முஸ்லிம்கள் மீதும் ஏதோவொரு வகையில் கட்டவிழ்த்துவிடுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென்று நாம் ஒருபோதும் கூறவிட முடியாது. சிலவேளைகளில் இலங்கை ஆட்சியாளர்களிடமும், சிங்கள சமூகத்திடமும் முஸ்லிம்கள் மீது தவறான அபிப்பிராயங்கள் ஏற்படும்வகையில் இந்தியா தனது திட்டங்களை வகுத்திருக்கலாம்.
அந்தவகையில் பிராந்திய வல்லரசாக செயற்படும் இந்தியாவின் நகர்வுகள் குறித்து உரியவகையில் பகுப்பாய்வு செய்து இலங்கை முஸ்லிம் சமூகத்தை விழிப்பூட்டுவது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகுமென்றால் அது மிகையாகாது.
(குறிப்பு – இந்த சிறு கட்டுரை குறித்த மாற்று கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன)

வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஆப்கானிஸ்தான், ஐக்கிய அமெரிக்க மார்க் 10 ஆண்டுகள்

Afghan women stand next to shoes for sale on the edge of Kabul river October 6, 2011.ஐக்கிய அமெரிக்க வாழ்க்கை மற்றும் பில்லியன் டாலர்கள் செலவு ஆயிரக்கணக்கான என்று ஒரு தசாப்தத்தில்-நீண்ட மோதலை தூண்டும், தலிபான் எதிரான போர் சென்றார் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க வெள்ளி 10 ஆண்டுகளில் உண்டாயின.

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பெருமை அனைத்து அல் காயிதா அமெரிக்கா மீதான தாக்குதல்களை செப்டம்பர் 11, 2001 அடுத்து தாலிபான் ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர் துவங்கியதில் இருந்து பேர் அந்த.

"இன்று முன்பு பத்து ஆண்டுகள், 9 / 11 பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், நம் நாட்டின் அல் காயிதா மற்றும் ஆப்கானிஸ்தான் அதன் தலிபான் பாதுகாவலர்கள் எதிரான போருக்கு சென்று," ஒபாமா ஒரு அழைப்பு, என்றது "தியாகம் தசாப்தத்தில்."

அவர் saluted "நம் நாட்டில், போரின் வடுக்களை சுமந்து யார் நம் குதித்தெழுகிற காயமடைந்த போர்வீரர்கள் உட்பட, பாதுகாப்பான பார்த்து பார்க்க வைக்க ஆப்கானிஸ்தான் வீர சேவை செய்த மேலும் அரை மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்."

"நாங்கள் கிட்டத்தட்ட 1,800 அமெரிக்க நாட்டு நினைவாக, மற்றும் எங்கள் பகிர்வு பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான ஆப்கானிஸ்தான் ல் இறுதி தியாகம் செய்த பல கூட்டணி மற்றும் ஆப்கானிய பங்காளிகள், மரியாதை," ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி சேர்க்கப்பட்டது.

அக்டோபர் 7, 2001 அன்று, அமெரிக்க விமானங்கள் காபூல் மற்றும் தலிபான் 9 / 11 தாக்குதலை தொடர்ந்து ஒசாமா பின் லேடன் சரணடைய மறுத்து பிறகு மற்ற ஆப்கானிய நகரங்களில் மூலோபாய இலக்குகள் மீது ஏவுகணைகள் மற்றும் லேசர்-வழிநடத்தப்பட்ட குண்டுகள் டஜன் கணக்கான கைவிடப்பட்டன.

வாரங்களுக்குள், இஸ்லாமிய தலிபான் ஆட்சி ஆபரேஷன் நீடிக்கும் சுதந்திர தாக்குதலை கீழ் தகர்த்தெறியப்பட்டது இருந்தது. அதன் போராளிகள் தப்பி மற்றும் ஆப்கானியர்கள் நவீன முறை மிகவும் அடக்குமுறை ஆட்சிகள் ஒரு சரிவை கொண்டாடி தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஊற்றினார்.

பின்னர், ஐக்கிய அமெரிக்க ல் பிரவுன் பல்கலைக்கழகம், குறைந்தது 33.877 மக்கள் ஏற்ப - வெளிநாட்டு மற்றும் ஆப்கானிய படையினர், பொதுமக்கள், பயங்கரவாதிகள் மற்றும் மற்றவர்கள் - ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் அமெரிக்கா மட்டும் குறைந்தது $ 444 பில்லியன் செலவு கூறுகிறார் போது இறந்துள்ளனர்.

மற்றும் அமெரிக்கா போன்ற தாலிபான் ஒரு நல்ல ஒழுக்கமான போராளிகள் மீது renegades ஒரு கந்தல் துணி-tag கொத்து இருந்து மாற்றும் தொடங்கியது சதாம் ஹுசைன், வெளியேற்றி துருப்புக்களை மற்றும் பில்லியன் டாலர்கள் பல்லாயிரக்கணக்கான செய்து, இராக் மாறாக அதன் கவனம் திரும்பிவிட்டது.

பத்து ஆண்டுகளில், சில ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் இன்று ஆப்கானிஸ்தான் 10 ஆண்டு சோவியத் விபத்து outstrips என்று வரலாற்றில் அதன் நீண்ட போர்களில் ஒன்று தீர்க்கும் பதில் ஆற்றல் வெளியே குண்டு வீசி தாக்கப்பட்டது மக்கள் ஒரு அரசியல் தீர்வு பார்க்கின்றன.

ஸ்டான்லி மக்கிரிஸ்டல், ஆப்கானிஸ்தான் தளபதியாக அவர் 2010 ல் பணி நீக்கம் செய்யப்பட்டார் வரை, அமெரிக்க தலைமையிலான நேட்டோ பணியை பாதியிலேயே அதன் இராணுவ இலக்குகளை அடைவதற்கு "விட கொஞ்சம் நல்லது" என்று கூறி நாள் முன்பு ஒரு பேச்சு கொடுத்தது.

"நாம் போதுமான அளவு தெரியாது நாம் இன்னும் போதுமான தெரியாது," அவர் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு சமீபத்திய வரலாற்றில் ஒரு "பயங்கரமான எளிமையான பார்வையிட" என்று கூறினார், என்றார்.

ஆப்கானிஸ்தான், இந்த ஆண்டு முன்னணி மீது ஆப்கானிய அரசாங்கத்தின் அல்லது நேட்டோ போது அல்லது பொதுமக்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது இல்லாமல் நிறைவேற்றியது, அது இன்னமும் அங்கே குடியிருக்கும் 140,000 வெளிநாட்டு துருப்புக்கள் வழக்கமான வணிக இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மற்றும் சுகாதார மகத்தான வெற்றி வரவேற்றார் கொண்டிருக்கும் பல ஆப்கானியர்கள்,, போரில் தமது நாட்டின் மற்றும் 2014 ல் timetabled வெளிநாட்டு படை திரும்ப தாக்கங்கள் இன்னும் அர்த்தம் என்ன பிரதிபலித்தன.

33 வயது மற்றும் நல்ல ஆங்கிலத்தில், ஹஃபிசுல்லா Ahmadi ஒரு மொழிபெயர்ப்பாளர் பணியாற்றி, "தலிபான் இருண்ட காலத்தில்" இறுதியில் பலனை அந்த ஒன்றாக இருந்து வருகிறது.

"தலிபான் ஆட்சியின் போது அவர்கள் வரவில்லை போது ஐக்கிய அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகள், போர் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் மக்கள் முடிந்தது கொலைகள் வருகையினால், அவர்கள் விரும்பும் எல்லாவற்றையும் அணுக வேண்டும்," என்று அவர் AFP கூறினார்.

ஆனால் நாள் கூட மேற்கத்திய துருப்புக்கள் உள்ள முரண்பாடு உயர்த்தி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் ஜனாதிபதி ஹமித் கர்சாய் அரசாங்கம் உள்ள ஊழல் ஆயிரக்கணக்கான மீது கோபம், அமெரிக்கா மற்றும் அதன் வெளிநாட்டு கூட்டாளிகள் மூலம் propped.

"அவர்கள் ஆப்கானிஸ்தான் வெளியே இழுக்க இருந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி வேண்டும்," அமெரிக்கர்கள் தெரு விற்பனையாளர் கான் ஆகா, 30, தெரிவித்தது.

"ஐக்கிய அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளும் அவர்கள் மீது படையெடுத்து போது நல்ல செய்யவில்லை. அனைத்து வன் முறை இருந்த போதிலும், நாங்கள் தலிபான் இஸ்லாமிய ஆட்சி நல்ல பாதுகாப்பு இருந்தது."

ஒபாமா அவர் "பெரும் சவால்களை" இருந்தது எச்சரித்தார் என்றாலும் அமெரிக்காவில் "பொறுப்புடன் வலிமை ஒரு நிலையில் இருந்து இன்றைய போர்கள் முடிவுக்கு" என்று தெரிவித்தது.

ஆனால் கர்சாய் தனது அரசாங்கம் மற்றும் அமெரிக்க தலைமையிலான நேட்டோ பணி செய்தேன் என்று தெரிவித்தது "ஆப்கானிய மக்கள் மற்றும் நமது அரசாங்கம் மற்றும் நமது சர்வதேச கூட்டாளிகள் மிக பெரிய குறை இது பாதுகாப்பு அளிப்பதில் மிகவும் மோசமாக."

என்ற தலைப்பில் கீழ் பிரிட்டிஷ் செய்தித்தாளான டெய்லி டெலிகிராப் எழுத RM கோவப்-கோல்ஸ் மேற்கத்திய மூலோபாயத்தின் கடுமையான இருந்தது காபூலில் Sherard முன்னாள் பிரிட்டிஷ் தூதர் "இது நாங்கள், ஆப்கானிஸ்தான் போர் வெற்றி என்று ஒரு கற்பனை இருக்கிறது".

இராணுவ நடவடிக்கைகள், அவர் எழுதினார், எழுச்சியின் "அடிப்படை நோயை குணப்படுத்துவது இல்லை" மட்டுமே "அமெரிக்க தலைமையிலான தூதரக ஒரு கடும் வலிமை மிக்க முயற்சி" கடந்த தசாப்தத்தின் தவறுகள் மற்றும் விட்டுவிடுதல் சரியான முடியும்.

தலிபான் கொண்ட தரகர் சமாதான முயற்சிகள் கர்சாய் அமைதி தூதர் Burhanuddin ரப்பானி செப்டம்பர் 20 படுகொலை கொந்தளிப்பு ஒரு brokering ஒரு தீர்வு அரசாங்கம் மூலோபாயம் எறிந்தனர் கூட முன் மிகக்குறைவான முன்னேற்றம் இருந்தது.

சில நிபுணர்கள் நாட்டின் கொல்லப்பட்டனர், 1992-96 ல் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று உள்நாட்டு வகையான போரை நோக்கி திரும்பி நெகிழ் முடியும் அஞ்சுகின்றன.

பலஸ்தீனிலிருந்து மக்கா வரை – வரலாற்றுப் பார்வை

Onislam.com இணையத்தளத்துக்கு மஸ்ஜிதுல் அக்சாவின் இமாம் Sheikh Yousef Juma Salama வழங்கிய பேட்டியின் தமிழ் வடிவம்.
ஹஜ் என்பது இஸ்லாத்தில் மிக முக்கியமான ஒரு கடமையாகும்.பாலஸ்தீன் என்பது அல்லாஹ்வின் தூதர்களின் தொட்டிலாகும் ஏனெனில் குர்ஆனில் கூறப்பட்டுள்ள பல நபிமார்கள் பாலஸ்தீனுடன் தொடர்புபட்டவர்கலாகவே உள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் இதவரை நடந்த இனிமேல் நடக்காத உலக மகா உச்சி மாநாடு பலஸ்தீனிலே இடம்பெற்றது.அதுதான் எங்கள் கண்மணி நாயகம் றசூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்களின் தலைமையில் உலகில் அதுவரை அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களுக்கும் தொழுவிக்கப்பட்ட தொழுகையாகும்.இதைப் போல் ஒரு கண்ணியமான ஆன்மீகமான ஒரு உயர்ந்த மாநாடு உலகில் நடந்திருக்குமா ? நிச்சயமாக இல்லவே இல்லை.கண்மணி நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுப்படி உலகில் நன்மையை நாடி புனிதப் பிரயாணம் செய்ய தகுதிவாய்ந்த அனுமதிக்கப்பட்ட பள்ளிவாயகள் மூன்று அதில் ஒன்று தான் ஜெருசலத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா.
நபியவர்கள் தனது உம்மத்துக்கு பரிசாகப் பெற்றுவந்த தொழுகையின் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவே.அந்த உயர்ந்த பரிசைப் பெற அவர்களின் பயணம் துவங்கிய இடமும் மஸ்ஜிதுல் அக்ஸாவே.இந்த கண்ணியமான சிறப்புக்களை பெற்ற புனித மஸ்ஜிதுல் அக்ஸா உள்ள பூமியே இன்றைய பலஸ்தீன்.ஆகவே பலஸ்தீனும் அங்குள்ள மக்களும் முஸ்லிம் உம்மத்தின் ஒரு பகுதியே.
உஸ்மானியா ஆட்சியின் போது ஹஜ்.
பலஸ்தீனில் ஹஜ் என்பது பல்வேறுபட்ட கட்டங்களையும் தடைகளையும் கொண்டது.200 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுபட்ட கிலாபத்தில் சிரியா,லெபனான்,ஜோர்டான் போன்ற பகுதிகளிலிருந்து ஹஜ்ஜுக்கு போகும் ஹாஜிகள் டமஸ்கஸ் நகரில் ஒன்று சேர்ந்து மஸ்ஜிதுல் அக்சாவுக்கு வந்து அங்கிருந்து பலஸ்தீன பூமியிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்லும் ஹாஜிகளையும் ஒன்றாக சேர்த்துக் கொண்டு புனித மக்கா நோக்கி தமது பிரயாணத்தை மேற்கோள்வார்கள்.
புனித மக்கா நோக்கிப் போகும் இந்த பயணத்துக்கு அப்பிராந்திய ஆளுநர்கள் அல்லது கலீபாவால் நியமிக்கப்படும் ஒரு அமீர் தலைமைதாங்குவார்.இந்த பிரயாணக் கூட்டத்தில் பாதுகாப்பு ஊழியர்கள்,சமையல்கார்கள் மற்றும் வைத்தியர்கள் என்போரும் அடக்கம்.மேலும் பயணத்தின் போது களைப்பை உணராமல் இருக்க இஸ்லாமிய மணம் கமழும் வாக்கியங்கள் கொண்ட கவிதைகள் படிக்க ஒரு குழுவினரும் செல்வார்கள்.
உஸ்மானியா கிலாபத்தின் போது பலஸ்தீனிலிருந்து மக்காவரை உள்ள தூரத்தை வந்து முடிக்க கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் செல்லும்.இப்படிப்பட்ட மிக நீண்ட பயணத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கிலாபத்துடைய நிர்வாகம் செய்து கொடுக்கும்,மிக முக்கியமான தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கிலாபத்தின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பாரிய கிணறுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
பிரித்தானிய ஆட்சியின் போது ஹஜ்.
முதலாம் உலகப் போரை தொடர்ந்து பலஸ்தீன் பிரித்தானிய ஆட்ச்சியின் கீழ் வந்ததுடன்,நிலைமை முழுமையாக மாறியது.முதலாவது அவர்கள் செய்தது மக்காவுக்கு ஒன்றாக பிரயாணம் செய்யும் பலஸ்தீன மக்களை பிரித்ததுதான்.பிரித்தானிய ஆட்சியின் முதல் வருடத்தில் பலஸ்தீன உயர் இஸ்லாமிய கவுன்சில் ஹஜ் விவகாரங்களை நிர்வகிக்க பிரித்தானிய ஆட்சியால் நியமிக்கப்பட்டது.
இதன் பிறகு பலஸ்தீன் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.அவை வடக்கு,தெற்கு மற்றும் மத்திய பலஸ்தீன் என பெயரிடப்பட்டது.வடக்கு பலஸ்தீன மக்கள் ஹஜ்ஜுக்குப் போகும் போது அவர்கள் ஹைபா புகையிரத நிலையத்தில் ஒன்று சேர்வார்கள்.ஹிஜாஸ் புகையிரதப் பாதை மக்கா,மதீனா,லெபனான்,பலஸ்தீன் மற்றும் சிரியா போன்ற நாடுகளை இணைக்கப் பயன்பட்டது.பீர்ஷேபா மற்றும் காசா மக்கள் ஹஜ்ஜுக்காக சுயஸ் புகையிரதப் பாதையை பயன்படுத்தப் பணிக்கப்பட்டனர்.அந்தக் காலங்களில் மக்காவுக்கு சுயஸ் காலவாயினூடாக சில கப்பல்களும் ஹஜ் பிரயாணிகளை ஏற்றிச்சென்றிருக்கின்றன.
இஸ்ரேலிய பலஸ்தீன ஆக்கிரமிப்பு.(1948 – 1967 )
1948 இல் பிரித்தானிய அரசின் பூரண உதவியின் கீழ் செயற்பட்ட யூத பயங்கரவாத குழுக்களால் 78 % பலஸ்தீன வரலாற்றுப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட பலஸ்தீன மக்களுக்கோஎஞ்சியது அவர்களின் சொந்த பூமியின் வெறும் 22 % மாத்திரமே.ஆக்கிரமிக்கப்படாமல் இருந்த மீதி பூமி மூன்று பகுதிகளாக பெயரிடப்பது.அவை காசா,மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலம் என்பனவாகும்.காசா நகரில் ஹஜ்ஜை பொறுத்தவரை ஹஜ் பிரயாணிகள் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலகங்களில் பதிவு செய்யும் படி பணிக்கப்பட்டனர்.காசா மக்கள் காசாவிலிருந்து சுயஸ் வரை புகையிரதத்தில் சென்று அங்கிருந்து கப்பலில் புனித மக்காவுக்கு பிரயாணம் செய்து வந்தனர்.
ஹிஜாஸ் ரயில்வே
தனித்துவமான கலாச்சார மரபுகள்.
1948 முதல் 1967 வரை காசா எகிப்து ஆட்சியின் கீழ் இருந்தது.ஒரு மாதத்துக்கும் மேற்பட்ட காலம் கொண்ட ஹஜ் பிரயாணத்தை மேற்கொள்ள காசா மக்களுக்கு பாரிய கஷ்டமாக இருந்தது.இதன் போது ஹஜ் பிரயாணத்தை மேற்கொள்ளும் நபருக்கு அவர்களின் நண்பர்கள் உறவினர்கள் தம்மால் இயன்ற அளவு உதவி செய்வார்கள்.இதன் பிற்பாடு ஹஜ் செய்தவர் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த பின்னர் அந்த உறவினர் நண்பகல் தந்த பணத்தை பரிசு வடிவில் திருப்பிக் கொடுப்பார்கள்.
காசா பகுதியில் ஹஜ் காலங்களில் இன்னுமொரு விஷேட பழக்கம் காணப்பட்டது.ஹஜ் பிரயாணம் மேற்கொள்ளும் நபரின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்கள் குறித்த நபரின் வீட்டில் ஒன்று கூடி இஸ்லாம் சம்பந்தமான ஹஜ் சம்பந்தமான கவிதைகளை படிப்பார்கள்.
1967 க்குப் பின் ஹஜ்.
1967 இன் பின் காசா மக்களின் ஹஜ் தேவைகள் ஜோர்டான் மூலமே நிறைவேற்றப்பட்டது.ஹஜ்ஜுக்காக ஜோர்டான் மூலம் பதிவு செய்யப்பட பின்னர்,ஜோர்டான் – இஸ்ரேல் எல்லையிலுள்ள Allenby Bridge என அழைக்கப்படும் King Hussein Bridge மூலம் இஸ்ரேலை கடந்த தரைவழியாகவே மக்காவை அடைவார்கள்.
முதல் பலஸ்தீன ஆணையகம் (1994 – 2006)
1994 இல் பலஸ்தீன ஆணையகம் நிறுவப்பட்ட பின் நாம் காசா,மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலம் இணைந்த ஒன்றுபட்ட இறையாண்மையுள்ள ஒரு பலஸ்தீன தேச உருவாக்கத்துக்கு பாடுபட்டு வருகிறோம்.
எங்கள் நோக்கம் காசா,மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலம் ஆகிய பலஸ்தீன பூமியில் பாலஸ்தீனர்களுக்கு தற்போது எஞ்சியுள்ள பகுதிகளிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளை ஒன்றாக புனித மக்க கூட்டிச் செல்வதேயாகும்.மாஷா அல்லாஹ் எங்களால் அதை செய்ய முடிந்தது.நாங்கள் ஒன்றுபட்ட பலஸ்தீன மக்களாக முதன் முறையாக ஹஜ் செய்ய முடிந்தது.
1994 ஹஜ் காலங்களில் காசாவிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் எகிப்தின் Arish International Airport லிருந்து செல்வார்கள்.மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெரூசலப்பகுதிகளிளிருந்து ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் மக்காவுக்கு பஸ் மூலமே பயணம் மேட்கொல்வார்கள்.
இரண்டாவது பாலஸ்தீனிய இன்திபாதா (Second Intifada)
2000 ஆம் ஆண்டில் அப்போதைய சவுதி மன்னராக இருந்த பாஹ்த் பின் அப்துல் அசிஸிடம் நான் ஒரு கோரிக்கையை வைத்தேன்.கடந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாமல் போன பலஸ்தீன மக்களுக்கு இம்முறை புனித ஹஜ்ஜை நிறைவேற்ற ஒரு சந்தர்பம் அளிக்குமாறும் அதற்கு நமக்கு 15000 பேரை கூட்டிக்கொண்டு வர அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டேன்.மாஷா அல்லாஹ் அதற்கு மன்னர் அவரது பூரண ஆதரவைத் தந்தார்.அல்லாஹ் அவரின் நல்ல செயல்களை பூரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த வருடம் இரண்டாவது பலஸ்தீன எழுச்சியில் கொலைகார இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் ஆயிரக்கணக்கான பலஸ்தீன இளைஞ்சர்கள் இறைவனடி சேர்ந்தனர்.இது அவர்களின் கொடும்பத்தினருக்கு பெரும் துன்பத்தை தேடிக்கொடுத்தது.எனவே பலஸ்தீன பூமிக்காக தம் இன்னுயிரை துறந்த போராளிகளின் குடும்பத்தினருக்கு ஹஜ் செய்ய ஒரு வாய்ப்புத் தருமாறு நான் மீண்டும் சவுதி மன்னர் பாஹ்த் பின் அப்துல் அசிஸிடம் ஒரு கோரிக்கையை வைத்தேன்.மாஷா அல்லாஹ் அதற்கும் அவர் அனுமதியை அவர் தந்தார்.இன்னும் ஆயிரம் பேருக்கான அனுமதியுடன் அவ்வருடம் மாஷா அல்லாஹ் 16000 ஹஜ் கடமையை பூர்த்தி செய்தோம்.
அந்த வருடம் இன்னுமொரு விஷேட சம்பவம் இடம்பெற்றது.ஹஜ்ஜுப் பெருநாளின் மறு நாள் நம்மை ஹஜ் விவகாரங்களுக்கான சவுதி இளவரசர் நயேப் பின் அப்துல் அசிஸ் ( Nayef Ben Abdelaziz ) சந்தித்தார்.அப்போது அவர் பாலஸ்தீனத்திலிருந்து ஹஜ்ஜுக்கு வந்த 16000 பேருக்கும் தலா 1000 சவுதி ரியால்கள் வழங்கினார்.
ஒற்றுமைக்கு ஒரு சந்தர்ப்பம்.
நான் இந்த சந்தர்ப்பத்தில் பலஸ்தீன மக்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.இன்னும் சில நாட்களில் நாம் ஒரு கண்ணியமிக்க பேறுபெற்ற நாள் ஒன்றை சந்திக்க இருக்கிறோம்.அந்நாளில் நாம் காசா,மேற்குகரை,கிழக்கு ஜெருசலம் என பிரிவுகள் இன்றி ஒரு பலஸ்தீன மக்களாய் நமக்கு இருக்கும் பொது எதிரியை தோற்கடிக்க ஒன்றுபடுவோம்.
ஒற்றுமை என்பது முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒரு மார்க்க கடமை என்பதை நினைவூட்டிகிறேன்.
அஸ்ஸலாமு அழைக்கும் வறாஹ்மதுல்லாஹி வபரகாத்துகு.
Sheikh Yousef Juma Salama with Onislam.net’s correspondent.
இது ஒரு மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரையாகும்.

புதன், 28 செப்டம்பர், 2011

முள்ளிவாய்காலில் கடாபி

கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கும் லிபியாவின் கடைசி நகரான சிர்தவுக்குள் போராளிகள் படை செவ்வாய்க்கிழமை நுழைந்தது. அந்த நகரின் கிழக்குப் பகுதி துறைமுகத்தை கைப்பற்றியுள்ளனர். கடாபியின் வசமிருந்த முக்கிய நகரங்களை அங்கு இப்போது ஆட்சி செய்து வரும் தேசிய இடைக்கால அரசின் (என்டிசி) படை கைப்பற்றியுள்ளது இதேவேளை எல்லோ கேக் என்று குறிபிடப்படும் மிகவும் ஆபத்து விளைவிக்க கூடிய ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் லிபியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது கடாபிபிறந்த நகரமான சிர்தே மட்டும் இன்னும் கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நகரையும் இப்போது போராளிகள முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
திங்கள்கிழமை இரவு நடந்த சண்டையில் சிர்தேவுக்கு கிழக்கே மத்தியத்தரைக் கடலை ஒட்டி அமைந்த துறைமுகத்தை போராளிகள கைப்பற்றிவிட்டதாக அந்தப் படையின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். நகருக்கு வெளியே கடாபிக்குச் சொந்தமான பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்றையும் அவர்கள் கைப்பற்றியிருக்கின்றனர். அதிலிருந்துதான் ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இடைகால நிர்வாகத்துக்கு ஆதரவாக நேட்டோ விமானங்களும் குண்டுகளை வீசி வருகின்றன. தூரத்திலிருந்து ராக்கெட் தாக்குதலும் நடத்தப்படுகிறது.
இறுதி யுத்தம் தீவிரமடைந்திருப்பதால், நகரத்திலிருந்த மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். போராளிகள சிர்தேவைக் கைப்பற்றிவிட்டால் தங்களைக் கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுவார்கள் என்று பொதுமக்கள் அச்சத்துடன் கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.
லிபியா பெரும்பகுதியை இடைக்கால அரசின் போராளிகள் கைப்பற்றிவிட்ட நிலையிலும், கடாபி எங்கிருக்கிறார் என்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. அவர் சிர்தே நகரில் பதுங்கியிருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிவிட்டனர். அல்ஜீரியாவுக்குத் தப்பிச் சென்ற அவரது மகள் ஐசா, “எனது தந்தை இறுதிவரை போராடுவார்’ என்று கூறியிருந்தார். இதனால் கடாபி இன்னமும் லிபியாவில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முள்ளிவாய்காலில் கடாபி

கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கும் லிபியாவின் கடைசி நகரான சிர்தவுக்குள் போராளிகள் படை செவ்வாய்க்கிழமை நுழைந்தது. அந்த நகரின் கிழக்குப் பகுதி துறைமுகத்தை கைப்பற்றியுள்ளனர். கடாபியின் வசமிருந்த முக்கிய நகரங்களை அங்கு இப்போது ஆட்சி செய்து வரும் தேசிய இடைக்கால அரசின் (என்டிசி) படை கைப்பற்றியுள்ளது இதேவேளை எல்லோ கேக் என்று குறிபிடப்படும் மிகவும் ஆபத்து விளைவிக்க கூடிய ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் லிபியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது கடாபிபிறந்த நகரமான சிர்தே மட்டும் இன்னும் கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நகரையும் இப்போது போராளிகள முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
திங்கள்கிழமை இரவு நடந்த சண்டையில் சிர்தேவுக்கு கிழக்கே மத்தியத்தரைக் கடலை ஒட்டி அமைந்த துறைமுகத்தை போராளிகள கைப்பற்றிவிட்டதாக அந்தப் படையின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். நகருக்கு வெளியே கடாபிக்குச் சொந்தமான பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்றையும் அவர்கள் கைப்பற்றியிருக்கின்றனர். அதிலிருந்துதான் ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இடைகால நிர்வாகத்துக்கு ஆதரவாக நேட்டோ விமானங்களும் குண்டுகளை வீசி வருகின்றன. தூரத்திலிருந்து ராக்கெட் தாக்குதலும் நடத்தப்படுகிறது.
இறுதி யுத்தம் தீவிரமடைந்திருப்பதால், நகரத்திலிருந்த மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். போராளிகள சிர்தேவைக் கைப்பற்றிவிட்டால் தங்களைக் கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுவார்கள் என்று பொதுமக்கள் அச்சத்துடன் கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.
லிபியா பெரும்பகுதியை இடைக்கால அரசின் போராளிகள் கைப்பற்றிவிட்ட நிலையிலும், கடாபி எங்கிருக்கிறார் என்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. அவர் சிர்தே நகரில் பதுங்கியிருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிவிட்டனர். அல்ஜீரியாவுக்குத் தப்பிச் சென்ற அவரது மகள் ஐசா, “எனது தந்தை இறுதிவரை போராடுவார்’ என்று கூறியிருந்தார். இதனால் கடாபி இன்னமும் லிபியாவில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

மத்திய கிழக்கில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இஸ்ரேல்- ஐ.நா சபையில் எர்டோகன் பேச்சு


மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் இஸ்ரேல் தான் என்று .நா சபை கூட்டத்தில் துருக்கி பிரதமர் எர்டோகன் ஆவேசமாக கூறினார்.
இஸ்ரேல்ஃபலஸ்தீன் பிரச்னையை தீர்ப்பதில் உலக நாடுகளுக்கு அக்கறை இருக்குமானால் இஸ்ரேலின் அடாஅவடிப் போக்கை இனியும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது என்று கூறினார்.
இப்பிரச்னையை தீர்க்க எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் முறியடிப்பதாகவும் குற்றம் சாட்டினார். பலஸ்தீன் பகுதிகளில் அராஜகம் செய்வது முதல் அணு ஆயுதம் வரை உலகின் விருப்பங்களுக்கு மாற்றமாக இஸ்ரேல் நடப்பதாகவும் குறை கூறினார்.
.நா சபையின் பல தீர்மானங்களை இஸ்ரேல் மதிக்காமல் மீறியுள்ளதாக குற்றம் சாட்டிய எர்டோகன் தாம் ஒரு பெட்டி தக்காளிகளை பலஸ்தீனத்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் கூட இஸ்ரேலிடம் ஒப்புதல் வாங்க வேண்டுமென்பது நிச்சயம் மனிதத்தன்மையாக இருக்க முடியாது என்றும் கூறினார்.
25.04.2011

சனி, 24 செப்டம்பர், 2011

இஸ்ரேலிய வதை முகாமில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண் கைதிகள் !

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை நான்கு பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தி வதை செய்துள்ளது என்று அஹ்ரார் என்ற சிறை கைதிகள் தொடர்பாக ஆராயும் அமைப்பு- The Ahrar prisoner studies center- தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் வதைமுகாமான ஹாசரோன் -HaSharon prison- வதை முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள நான்கு பெண் கைதிகளுக்கே சோதனை என்ற பெயரில் இந்த வதை இடம்பெற்றுள்ளது.
இதன்போது அந்த வதை அறையில் 10 இஸ்ரேலிய பெண் சிப்பாய்களும் , 5 ஆண் சிப்பாய்களும், குறித்த வதை அறையின் அதிகாரியும் மற்றும் புலனாய்வு பிரிவினரும் இருந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுகாக அந்த பெண்களின் பெயரை வெளியிடமுடியாது என்று அஹ்ரார் அமைப்பு தெரிவித்துள்ளது விரிவாக

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

நெஞ்சை உலுக்கும் மிருக வதைகள்

இஸ்லாம் மிருகங்கள் மீது இறக்கம் காட்டுமாறு போதிக்கின்றது தாகித்த ஒரு நாய்க்கு தண்ணீர் புகட்டிய காரணத்தினால் ஒரு மோசமான விபச்சாரி மன்னிக்கப்பட்டால் என்று இஸ்லாம் கூறி மிருகங்கள் மீது அன்பும் ,கருணையும் கட்டுமாறு எமக்கு போதிக்கின்றது.
மனிதன் நாகரீக வளர்ச்சியில் உச்சத்தை தொட்டுவிட்டான் என்று கூறுகிறோம் ஆனால் நாம் வாழும் உலகில் எம்முடன் வாழும் மிருகங்கள் எந்த கருணையும் இன்றி வைதைக்கப்படுகின்றது. மிகவும் மோசமாக சித்திர வதைகளை அனுபவிக்கின்றன நாகரிகத்தின் தொட்டில் என்று தம்மை தாமே அழைத்து கொள்ளும் மேற்கு நாடுகளில் கூட்டு மிருக வதைகள் தினமும் இடம்பெறுகின்றது. Video
மிருகங்கள் மனிதனை போன்று பண்பாட்டை கற்றுகொள்பவை அல்ல. அவை அவற்றுக்குரிய காட்டுப்பண்பாட்டில் வாழ்பவை. தன் குட்டிகளில் மூத்ததை உண்ணும் மிருகங்கள் உண்டு. ஊனமுற்ற குட்டியை கைவிட்டுச்செல்பவை உண்டு. ஒன்றை ஒன்று அடித்து கொல்பவை உண்டு ஆனால் மனிதன் தொடர்ந்தும் நாகரீகத்தை கற்று தெரிந்து விளங்கி உயர்வடைய கூடியவன் அதனால்தான் அல்லாஹ் மனிதர்களுக்கு போதனைகளை வழங்குகின்றான்.
இதன் மூலம் மனிதன் உருவாக்கிக் கொண்டுள்ள சமூகவாழ்க்கைக்கான நெறிகளே அவன் பண்பாட்டுக் கூறுகளாக மாறியுள்ளன. அன்பு, கருணை, பாசம் , சம உரிமை என நாம் சொல்லும் இவை பல வழிமுறைகள் மூலம் அல்லாஹ் போதிக்க மனிதனால் மெல்லமெல்ல உள்வாங்கி கொள்ளப்பட்டவைதான் .
நாம் வாழும் உலகில் மிருகங்கள் இறைவனின் ஒரு படைப்பாகவும் இயற்கையின் ஒருபகுதியாக உள்ளது. இவற்றுடன் மனிதர்களான நாம் அன்பாகவும் , பண்பாகவும் ,கவனமாகவும் நடந்து கொள்ளவேண்டும் அவற்றின் உரிமைகளை நாம் வழங்க வேண்டும் என்று இஸ்லாம் எமக்கு போதிக்கின்றது. ஆனால் உலகின் நாகரீகத்தின் தொட்டில்கள் என்று கருதப்படும் அமெரிக்காவிலும் , மேற்கு நாடுகளிலும் ஒவ்வொரு வினாடியும் கூட்டு மிருக வதைகள் இடம்பெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றது.
மிகவும் அழகாகவும் பாரியதகவும் உயர்வான உற்பத்தி பெறுமானங்களை கொண்டு காணப்படும் அமெரிக்காவின் பண்ணைகளில் மனிதர்கள் வளர்ச்சி அடையாத அநாகரீக மனப்பான்மை கொண்டவர்களாகத்தான் இன்றும் இருகின்றார்கள். இவர்களின் நடவடிக்கைகளில் பலவற்றை அரசும் அங்கீகரித்துள்ளது என்பது பெரும் வேதனை தரும் விடயமாகும்.
கோதுமை போன்ற உணவு உற்பத்தி அளவுக்கு அதிகமாக இடம்பெற்றால். தனது பண்டத்தின் பெறுமதி உலகில் குறைவடைந்து விடும் என்ற காரணத்தினால் மேலதிக உற்பத்தியை கடலில் கொட்டும் அமெரிக்கா அல்லது கோதுமையை உற்பத்தி செய்யாமல் இருப்பதற்காக கோதுமை பண்ணை உரிமையாளர்களுக்கு பணம் வழங்கி உற்பத்தி செய்யவேண்டாம் என்று கூறும் அமெரிக்கா
இதனால் ஆபிரிக்காவில் சோமாலியா போன்ற நாடுகளில் பல லட்சம் மனித உயிர்கள் பட்டினியால் கொல்லபடுவதை கூட சற்றும் கருத்தில் கொள்ளாத அமெரிக்கா , செப்டம்பர் தாக்குதலில் கொல்லப்பட்ட மூவாயிரம் அமெரிக்கர்களுக்காக பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தி இரண்டு லட்சத்தி இருபத்தையாயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்துள்ள அமெரிக்கா மிருகங்களை விடுமா ? யார் நாகரீகம் கொண்டவர்கள் ?.
அது தொடர்பான ஓர் ஆவணத்தை இங்கு பதிவு செய்கின்றோம் .

முஸ்லிம்கள் பயங்கரவாதத்தின் அனுதாபிகள்: FBI போதனை

அமெரிக்க உளவு பிரிவான FBI தனது உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கு போது அமெரிக்காவில் பிரதான, பெரும்பாலான முஸ்லிம்கள் பெரும்பாலும் பயங்கரவாதத்தின் அனுதாபிகளாக இருகின்றார்கள் -main stream” American Muslims are likely to be terrorist sympathizers- இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் கொடூரமானவர்கள் “violent” . போன்ற மிகவும் மோசமான முறையிலான பயிற்சி வழங்கும் முறை அம்பலமாகியுள்ளது.
அதில் அல்லாஹ்வின் தூதரையும் ”வழமைக்கு புறம்பான நடத்தைகளை கொண்ட மத குழுவின் தலைவர்” – “cult leader” என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது என்று wired.com என்ற இணையத்தளம் தான் கைப்பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதேபோன்று யுத்தம் நிரந்தரமானது என்றும் சமாதானம் தற்காலிகமானது என்று இஸ்லாம் கூறுவதாகவும் முஸ்லிம்கள் அதை விசுவாசிப்பதாகவும் “War is the rule and peace is only temporary” குறிபிடுகின்றது. மேலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் , யூதர்களைவிடவும் வன்முறை நிறைந்தவர்கள். இவை போன்ற முஸ்லிம்களை மிகவும் மோசமான விரோதிகளாக, பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பயிற்சியைத்தான் அமெரிக்க FBI தனது ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றமை அம்பலமாகியுள்ளது.
இஸ்லாமிய நடைமுறையான நன்கொடை வழங்குதல் யுத்ததிற்கு பணம் சேகரிக்கும் நடைமுறைதான் என்றும் அந்த பயிற்சி கோவை குறிபிடுகின்றது .
அமெரிக்காவில் முஸ்லிம்கள் பல ஒடுக்கு முறைகளை சந்திக்கின்றனர், பலர் போலியான குற்றசாட்டின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அமெரிக்காவின் உள்நாட்டு உளவு பிரிவான FBI க்கு தகவல் வழங்குமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர் , மறுப்பவர்கள் போலியான குற்றசாட்டுக்களில் வதை முகாம்களில் அடைக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில் மஸ்ஜித்துகள் பல அடக்கு முறைகளை எதிர்கொள்கின்றது , இரகசிய கமராக்கள் பொருத்தப்பட்டு அவை கண்காகிக்கபடுகின்றது. மஸ்ஜிதுகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றது இன்னும் மஸ்ஜிதுகள் முற்றாக எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் கடத்தல், கைது, விசாரணை ,சித்திரவதை, கொலை போன்ற அமெரிக்க அரச பயங்கரவாத்தின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர் இவற்றை அமெரிக்காவின் மனித உரிமைக்கான அமைப்புகள் கூட பெரிதாக கண்டுகொள்ளவதில்லை. அமெரிக்காவில் பல மஸ்ஜிதுகள் எரிக்கப்பட்டுள்ளன. பல மஸ்ஜித் இமாம்கள் கைதாகி சிறைகளில் வதையுருகின்றனர். சில இமாமகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் இவர்களின் வரிசையில்
கடந்த 2009 அக்டோபர் 28ஆம் திகதி அமெரிக்க உள்நாட்டு உளவு துறையான FBI யினால் லுக்மான் அமீன் அப்துல்லாஹ் என்ற டெட்ராயிடில் நகர மஸ்ஜித் இமாம் 21 தடவைகள் சுடப்பட்டு கொல்லபட்டார் என்பது சிறந்த உதாரணம். அரசுக்கெதிராக தாக்குதல் நடத்த மக்களை தூண்டிவிடுகிறார் என்ற போலியான குற்ற சாட்டு இவர்மீது சுமத்த பட்டிருந்தது. இவர் தேவையற்ற முறையில் சுட்டுகொள்ளபட்டார் என்பது பின்னர் வெளியாகியது.
இதேபோன்று அமெரிக்க இராணுவ புலனாய்வு இயந்திரங்களினால் வதைக்கபட்ட டாக்டர் ஆபியாவை அமெரிக்க நீதித்துறை 86 வருடங்கள் சிறையில் தள்ளியது இவரின் எந்தவொரு விடையத்திலும் கூட சர்வதேச அளவில் புகழ் பெற்ற அமெரிக்கவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்பான அமஷ்டி இன்டர்நேஷனல் கூட வாயை திறக்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.
அதேபோன்று தாரிக் மேஹன்னா என்ற டாக்டர் இவர் 28 வயது நிரம்பிய இளம் முஸ்லிம் அமெரிக்க டாக்டர் இவர் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் உயர்கல்வி கற்று Phd பட்டம் பெற்ற ஒரு புத்திஜீவி இவரின் இஸ்லாமிய துடிப்பு , சமூக சேவை , மாற்று மத சமூகங்கள் மத்தியில் இவரின் சமாதான செயல்பாடுகள் போன்றவற்றால் மிகவும் அறியப்பட்டவர் இவரிடம் இருந்த சமூக தொடர்பாடல், முஸ்லிம் சமுகத்தில் இவருக்கு இருந்த செல்வாக்கு, முஸ்லிம் வாலிபர்களுடன் இவருக்கு இருந்த உறவு என்பன அமெரிக்காவின் கழுகு கண்களான FBI உளவு துறைக்கு தேவைபட்டது.
பல தடவைகள் தாரிக்கை அணுகிய FBI தமக்கு தகவல் வழங்கும் ஒருவனாக வேலை செய்யுமாறு கேட்டது முஸ்லிம் சமுகத்தின் இருக்கும் இஸ்லாமிய துடிப்புள்ள வாலிபர்கள் பற்றி தமக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டது அதற்கு தாரிர் திடமாக மறுத்துவிட்டார். இதன் காரணமாக இவரை கடந்த 2008 ஆம் ஆண்டு சிறையில் தள்ளியது இவர் நியாயமற்ற முறையில் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 696 நாட்கள் என்பது குறிபிடத்தக்கது.
இவ்வாறான ஆயிரக்கணக்கான சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்த வண்ணமுள்ளது. மேலே சொன்னவை சில உதாரணங்கள் மட்டும்தான். இதற்கான பிரதான காரணம்தான் தற்போது வெளியாகியுள்ள FBI பயிற்சி முறை அமெரிக்க அரச பாதுகாப்பு தரப்பு அமெரிக்க முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாதிகளின் அனுதாபிகள் என்றும் போதிக்கின்றமை.
இந்த கீழ்த்தரமான பயிற்சி முறை அமெரிக்க பொது மக்களையும் முஸ்லிம்கள் மீது தூண்டிவிட காரணமாக அமைகின்றது என்பதை ஊகிக்க முடியும் , அமெரிக்க அரசாங்கம் அரச முஸ்லிம்களுக்கு எதிரான அரச பயங்கரவாத்தை ஊட்டி வளர்கின்றது என்பதுதான் தற்போது வெளியாகியுள்ள தகவல் சொல்லும் செய்தி. இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அமெரிக்காவின் உண்மை முகம் தெரிந்த சிலருக்கு இதுவொன்றும் புதிய செய்தியல்ல.