புதன், 28 செப்டம்பர், 2011

முள்ளிவாய்காலில் கடாபி

கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கும் லிபியாவின் கடைசி நகரான சிர்தவுக்குள் போராளிகள் படை செவ்வாய்க்கிழமை நுழைந்தது. அந்த நகரின் கிழக்குப் பகுதி துறைமுகத்தை கைப்பற்றியுள்ளனர். கடாபியின் வசமிருந்த முக்கிய நகரங்களை அங்கு இப்போது ஆட்சி செய்து வரும் தேசிய இடைக்கால அரசின் (என்டிசி) படை கைப்பற்றியுள்ளது இதேவேளை எல்லோ கேக் என்று குறிபிடப்படும் மிகவும் ஆபத்து விளைவிக்க கூடிய ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் லிபியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது கடாபிபிறந்த நகரமான சிர்தே மட்டும் இன்னும் கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நகரையும் இப்போது போராளிகள முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
திங்கள்கிழமை இரவு நடந்த சண்டையில் சிர்தேவுக்கு கிழக்கே மத்தியத்தரைக் கடலை ஒட்டி அமைந்த துறைமுகத்தை போராளிகள கைப்பற்றிவிட்டதாக அந்தப் படையின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். நகருக்கு வெளியே கடாபிக்குச் சொந்தமான பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்றையும் அவர்கள் கைப்பற்றியிருக்கின்றனர். அதிலிருந்துதான் ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இடைகால நிர்வாகத்துக்கு ஆதரவாக நேட்டோ விமானங்களும் குண்டுகளை வீசி வருகின்றன. தூரத்திலிருந்து ராக்கெட் தாக்குதலும் நடத்தப்படுகிறது.
இறுதி யுத்தம் தீவிரமடைந்திருப்பதால், நகரத்திலிருந்த மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். போராளிகள சிர்தேவைக் கைப்பற்றிவிட்டால் தங்களைக் கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுவார்கள் என்று பொதுமக்கள் அச்சத்துடன் கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.
லிபியா பெரும்பகுதியை இடைக்கால அரசின் போராளிகள் கைப்பற்றிவிட்ட நிலையிலும், கடாபி எங்கிருக்கிறார் என்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. அவர் சிர்தே நகரில் பதுங்கியிருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிவிட்டனர். அல்ஜீரியாவுக்குத் தப்பிச் சென்ற அவரது மகள் ஐசா, “எனது தந்தை இறுதிவரை போராடுவார்’ என்று கூறியிருந்தார். இதனால் கடாபி இன்னமும் லிபியாவில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முள்ளிவாய்காலில் கடாபி

கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கும் லிபியாவின் கடைசி நகரான சிர்தவுக்குள் போராளிகள் படை செவ்வாய்க்கிழமை நுழைந்தது. அந்த நகரின் கிழக்குப் பகுதி துறைமுகத்தை கைப்பற்றியுள்ளனர். கடாபியின் வசமிருந்த முக்கிய நகரங்களை அங்கு இப்போது ஆட்சி செய்து வரும் தேசிய இடைக்கால அரசின் (என்டிசி) படை கைப்பற்றியுள்ளது இதேவேளை எல்லோ கேக் என்று குறிபிடப்படும் மிகவும் ஆபத்து விளைவிக்க கூடிய ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் லிபியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது கடாபிபிறந்த நகரமான சிர்தே மட்டும் இன்னும் கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நகரையும் இப்போது போராளிகள முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
திங்கள்கிழமை இரவு நடந்த சண்டையில் சிர்தேவுக்கு கிழக்கே மத்தியத்தரைக் கடலை ஒட்டி அமைந்த துறைமுகத்தை போராளிகள கைப்பற்றிவிட்டதாக அந்தப் படையின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். நகருக்கு வெளியே கடாபிக்குச் சொந்தமான பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்றையும் அவர்கள் கைப்பற்றியிருக்கின்றனர். அதிலிருந்துதான் ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இடைகால நிர்வாகத்துக்கு ஆதரவாக நேட்டோ விமானங்களும் குண்டுகளை வீசி வருகின்றன. தூரத்திலிருந்து ராக்கெட் தாக்குதலும் நடத்தப்படுகிறது.
இறுதி யுத்தம் தீவிரமடைந்திருப்பதால், நகரத்திலிருந்த மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். போராளிகள சிர்தேவைக் கைப்பற்றிவிட்டால் தங்களைக் கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுவார்கள் என்று பொதுமக்கள் அச்சத்துடன் கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.
லிபியா பெரும்பகுதியை இடைக்கால அரசின் போராளிகள் கைப்பற்றிவிட்ட நிலையிலும், கடாபி எங்கிருக்கிறார் என்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. அவர் சிர்தே நகரில் பதுங்கியிருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிவிட்டனர். அல்ஜீரியாவுக்குத் தப்பிச் சென்ற அவரது மகள் ஐசா, “எனது தந்தை இறுதிவரை போராடுவார்’ என்று கூறியிருந்தார். இதனால் கடாபி இன்னமும் லிபியாவில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

மத்திய கிழக்கில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இஸ்ரேல்- ஐ.நா சபையில் எர்டோகன் பேச்சு


மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் இஸ்ரேல் தான் என்று .நா சபை கூட்டத்தில் துருக்கி பிரதமர் எர்டோகன் ஆவேசமாக கூறினார்.
இஸ்ரேல்ஃபலஸ்தீன் பிரச்னையை தீர்ப்பதில் உலக நாடுகளுக்கு அக்கறை இருக்குமானால் இஸ்ரேலின் அடாஅவடிப் போக்கை இனியும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது என்று கூறினார்.
இப்பிரச்னையை தீர்க்க எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் முறியடிப்பதாகவும் குற்றம் சாட்டினார். பலஸ்தீன் பகுதிகளில் அராஜகம் செய்வது முதல் அணு ஆயுதம் வரை உலகின் விருப்பங்களுக்கு மாற்றமாக இஸ்ரேல் நடப்பதாகவும் குறை கூறினார்.
.நா சபையின் பல தீர்மானங்களை இஸ்ரேல் மதிக்காமல் மீறியுள்ளதாக குற்றம் சாட்டிய எர்டோகன் தாம் ஒரு பெட்டி தக்காளிகளை பலஸ்தீனத்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் கூட இஸ்ரேலிடம் ஒப்புதல் வாங்க வேண்டுமென்பது நிச்சயம் மனிதத்தன்மையாக இருக்க முடியாது என்றும் கூறினார்.
25.04.2011

சனி, 24 செப்டம்பர், 2011

இஸ்ரேலிய வதை முகாமில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண் கைதிகள் !

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை நான்கு பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தி வதை செய்துள்ளது என்று அஹ்ரார் என்ற சிறை கைதிகள் தொடர்பாக ஆராயும் அமைப்பு- The Ahrar prisoner studies center- தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் வதைமுகாமான ஹாசரோன் -HaSharon prison- வதை முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள நான்கு பெண் கைதிகளுக்கே சோதனை என்ற பெயரில் இந்த வதை இடம்பெற்றுள்ளது.
இதன்போது அந்த வதை அறையில் 10 இஸ்ரேலிய பெண் சிப்பாய்களும் , 5 ஆண் சிப்பாய்களும், குறித்த வதை அறையின் அதிகாரியும் மற்றும் புலனாய்வு பிரிவினரும் இருந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுகாக அந்த பெண்களின் பெயரை வெளியிடமுடியாது என்று அஹ்ரார் அமைப்பு தெரிவித்துள்ளது விரிவாக

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

நெஞ்சை உலுக்கும் மிருக வதைகள்

இஸ்லாம் மிருகங்கள் மீது இறக்கம் காட்டுமாறு போதிக்கின்றது தாகித்த ஒரு நாய்க்கு தண்ணீர் புகட்டிய காரணத்தினால் ஒரு மோசமான விபச்சாரி மன்னிக்கப்பட்டால் என்று இஸ்லாம் கூறி மிருகங்கள் மீது அன்பும் ,கருணையும் கட்டுமாறு எமக்கு போதிக்கின்றது.
மனிதன் நாகரீக வளர்ச்சியில் உச்சத்தை தொட்டுவிட்டான் என்று கூறுகிறோம் ஆனால் நாம் வாழும் உலகில் எம்முடன் வாழும் மிருகங்கள் எந்த கருணையும் இன்றி வைதைக்கப்படுகின்றது. மிகவும் மோசமாக சித்திர வதைகளை அனுபவிக்கின்றன நாகரிகத்தின் தொட்டில் என்று தம்மை தாமே அழைத்து கொள்ளும் மேற்கு நாடுகளில் கூட்டு மிருக வதைகள் தினமும் இடம்பெறுகின்றது. Video
மிருகங்கள் மனிதனை போன்று பண்பாட்டை கற்றுகொள்பவை அல்ல. அவை அவற்றுக்குரிய காட்டுப்பண்பாட்டில் வாழ்பவை. தன் குட்டிகளில் மூத்ததை உண்ணும் மிருகங்கள் உண்டு. ஊனமுற்ற குட்டியை கைவிட்டுச்செல்பவை உண்டு. ஒன்றை ஒன்று அடித்து கொல்பவை உண்டு ஆனால் மனிதன் தொடர்ந்தும் நாகரீகத்தை கற்று தெரிந்து விளங்கி உயர்வடைய கூடியவன் அதனால்தான் அல்லாஹ் மனிதர்களுக்கு போதனைகளை வழங்குகின்றான்.
இதன் மூலம் மனிதன் உருவாக்கிக் கொண்டுள்ள சமூகவாழ்க்கைக்கான நெறிகளே அவன் பண்பாட்டுக் கூறுகளாக மாறியுள்ளன. அன்பு, கருணை, பாசம் , சம உரிமை என நாம் சொல்லும் இவை பல வழிமுறைகள் மூலம் அல்லாஹ் போதிக்க மனிதனால் மெல்லமெல்ல உள்வாங்கி கொள்ளப்பட்டவைதான் .
நாம் வாழும் உலகில் மிருகங்கள் இறைவனின் ஒரு படைப்பாகவும் இயற்கையின் ஒருபகுதியாக உள்ளது. இவற்றுடன் மனிதர்களான நாம் அன்பாகவும் , பண்பாகவும் ,கவனமாகவும் நடந்து கொள்ளவேண்டும் அவற்றின் உரிமைகளை நாம் வழங்க வேண்டும் என்று இஸ்லாம் எமக்கு போதிக்கின்றது. ஆனால் உலகின் நாகரீகத்தின் தொட்டில்கள் என்று கருதப்படும் அமெரிக்காவிலும் , மேற்கு நாடுகளிலும் ஒவ்வொரு வினாடியும் கூட்டு மிருக வதைகள் இடம்பெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றது.
மிகவும் அழகாகவும் பாரியதகவும் உயர்வான உற்பத்தி பெறுமானங்களை கொண்டு காணப்படும் அமெரிக்காவின் பண்ணைகளில் மனிதர்கள் வளர்ச்சி அடையாத அநாகரீக மனப்பான்மை கொண்டவர்களாகத்தான் இன்றும் இருகின்றார்கள். இவர்களின் நடவடிக்கைகளில் பலவற்றை அரசும் அங்கீகரித்துள்ளது என்பது பெரும் வேதனை தரும் விடயமாகும்.
கோதுமை போன்ற உணவு உற்பத்தி அளவுக்கு அதிகமாக இடம்பெற்றால். தனது பண்டத்தின் பெறுமதி உலகில் குறைவடைந்து விடும் என்ற காரணத்தினால் மேலதிக உற்பத்தியை கடலில் கொட்டும் அமெரிக்கா அல்லது கோதுமையை உற்பத்தி செய்யாமல் இருப்பதற்காக கோதுமை பண்ணை உரிமையாளர்களுக்கு பணம் வழங்கி உற்பத்தி செய்யவேண்டாம் என்று கூறும் அமெரிக்கா
இதனால் ஆபிரிக்காவில் சோமாலியா போன்ற நாடுகளில் பல லட்சம் மனித உயிர்கள் பட்டினியால் கொல்லபடுவதை கூட சற்றும் கருத்தில் கொள்ளாத அமெரிக்கா , செப்டம்பர் தாக்குதலில் கொல்லப்பட்ட மூவாயிரம் அமெரிக்கர்களுக்காக பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தி இரண்டு லட்சத்தி இருபத்தையாயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்துள்ள அமெரிக்கா மிருகங்களை விடுமா ? யார் நாகரீகம் கொண்டவர்கள் ?.
அது தொடர்பான ஓர் ஆவணத்தை இங்கு பதிவு செய்கின்றோம் .

முஸ்லிம்கள் பயங்கரவாதத்தின் அனுதாபிகள்: FBI போதனை

அமெரிக்க உளவு பிரிவான FBI தனது உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கு போது அமெரிக்காவில் பிரதான, பெரும்பாலான முஸ்லிம்கள் பெரும்பாலும் பயங்கரவாதத்தின் அனுதாபிகளாக இருகின்றார்கள் -main stream” American Muslims are likely to be terrorist sympathizers- இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் கொடூரமானவர்கள் “violent” . போன்ற மிகவும் மோசமான முறையிலான பயிற்சி வழங்கும் முறை அம்பலமாகியுள்ளது.
அதில் அல்லாஹ்வின் தூதரையும் ”வழமைக்கு புறம்பான நடத்தைகளை கொண்ட மத குழுவின் தலைவர்” – “cult leader” என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது என்று wired.com என்ற இணையத்தளம் தான் கைப்பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதேபோன்று யுத்தம் நிரந்தரமானது என்றும் சமாதானம் தற்காலிகமானது என்று இஸ்லாம் கூறுவதாகவும் முஸ்லிம்கள் அதை விசுவாசிப்பதாகவும் “War is the rule and peace is only temporary” குறிபிடுகின்றது. மேலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் , யூதர்களைவிடவும் வன்முறை நிறைந்தவர்கள். இவை போன்ற முஸ்லிம்களை மிகவும் மோசமான விரோதிகளாக, பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பயிற்சியைத்தான் அமெரிக்க FBI தனது ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றமை அம்பலமாகியுள்ளது.
இஸ்லாமிய நடைமுறையான நன்கொடை வழங்குதல் யுத்ததிற்கு பணம் சேகரிக்கும் நடைமுறைதான் என்றும் அந்த பயிற்சி கோவை குறிபிடுகின்றது .
அமெரிக்காவில் முஸ்லிம்கள் பல ஒடுக்கு முறைகளை சந்திக்கின்றனர், பலர் போலியான குற்றசாட்டின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அமெரிக்காவின் உள்நாட்டு உளவு பிரிவான FBI க்கு தகவல் வழங்குமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர் , மறுப்பவர்கள் போலியான குற்றசாட்டுக்களில் வதை முகாம்களில் அடைக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில் மஸ்ஜித்துகள் பல அடக்கு முறைகளை எதிர்கொள்கின்றது , இரகசிய கமராக்கள் பொருத்தப்பட்டு அவை கண்காகிக்கபடுகின்றது. மஸ்ஜிதுகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றது இன்னும் மஸ்ஜிதுகள் முற்றாக எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் கடத்தல், கைது, விசாரணை ,சித்திரவதை, கொலை போன்ற அமெரிக்க அரச பயங்கரவாத்தின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர் இவற்றை அமெரிக்காவின் மனித உரிமைக்கான அமைப்புகள் கூட பெரிதாக கண்டுகொள்ளவதில்லை. அமெரிக்காவில் பல மஸ்ஜிதுகள் எரிக்கப்பட்டுள்ளன. பல மஸ்ஜித் இமாம்கள் கைதாகி சிறைகளில் வதையுருகின்றனர். சில இமாமகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் இவர்களின் வரிசையில்
கடந்த 2009 அக்டோபர் 28ஆம் திகதி அமெரிக்க உள்நாட்டு உளவு துறையான FBI யினால் லுக்மான் அமீன் அப்துல்லாஹ் என்ற டெட்ராயிடில் நகர மஸ்ஜித் இமாம் 21 தடவைகள் சுடப்பட்டு கொல்லபட்டார் என்பது சிறந்த உதாரணம். அரசுக்கெதிராக தாக்குதல் நடத்த மக்களை தூண்டிவிடுகிறார் என்ற போலியான குற்ற சாட்டு இவர்மீது சுமத்த பட்டிருந்தது. இவர் தேவையற்ற முறையில் சுட்டுகொள்ளபட்டார் என்பது பின்னர் வெளியாகியது.
இதேபோன்று அமெரிக்க இராணுவ புலனாய்வு இயந்திரங்களினால் வதைக்கபட்ட டாக்டர் ஆபியாவை அமெரிக்க நீதித்துறை 86 வருடங்கள் சிறையில் தள்ளியது இவரின் எந்தவொரு விடையத்திலும் கூட சர்வதேச அளவில் புகழ் பெற்ற அமெரிக்கவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்பான அமஷ்டி இன்டர்நேஷனல் கூட வாயை திறக்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.
அதேபோன்று தாரிக் மேஹன்னா என்ற டாக்டர் இவர் 28 வயது நிரம்பிய இளம் முஸ்லிம் அமெரிக்க டாக்டர் இவர் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் உயர்கல்வி கற்று Phd பட்டம் பெற்ற ஒரு புத்திஜீவி இவரின் இஸ்லாமிய துடிப்பு , சமூக சேவை , மாற்று மத சமூகங்கள் மத்தியில் இவரின் சமாதான செயல்பாடுகள் போன்றவற்றால் மிகவும் அறியப்பட்டவர் இவரிடம் இருந்த சமூக தொடர்பாடல், முஸ்லிம் சமுகத்தில் இவருக்கு இருந்த செல்வாக்கு, முஸ்லிம் வாலிபர்களுடன் இவருக்கு இருந்த உறவு என்பன அமெரிக்காவின் கழுகு கண்களான FBI உளவு துறைக்கு தேவைபட்டது.
பல தடவைகள் தாரிக்கை அணுகிய FBI தமக்கு தகவல் வழங்கும் ஒருவனாக வேலை செய்யுமாறு கேட்டது முஸ்லிம் சமுகத்தின் இருக்கும் இஸ்லாமிய துடிப்புள்ள வாலிபர்கள் பற்றி தமக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டது அதற்கு தாரிர் திடமாக மறுத்துவிட்டார். இதன் காரணமாக இவரை கடந்த 2008 ஆம் ஆண்டு சிறையில் தள்ளியது இவர் நியாயமற்ற முறையில் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 696 நாட்கள் என்பது குறிபிடத்தக்கது.
இவ்வாறான ஆயிரக்கணக்கான சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்த வண்ணமுள்ளது. மேலே சொன்னவை சில உதாரணங்கள் மட்டும்தான். இதற்கான பிரதான காரணம்தான் தற்போது வெளியாகியுள்ள FBI பயிற்சி முறை அமெரிக்க அரச பாதுகாப்பு தரப்பு அமெரிக்க முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாதிகளின் அனுதாபிகள் என்றும் போதிக்கின்றமை.
இந்த கீழ்த்தரமான பயிற்சி முறை அமெரிக்க பொது மக்களையும் முஸ்லிம்கள் மீது தூண்டிவிட காரணமாக அமைகின்றது என்பதை ஊகிக்க முடியும் , அமெரிக்க அரசாங்கம் அரச முஸ்லிம்களுக்கு எதிரான அரச பயங்கரவாத்தை ஊட்டி வளர்கின்றது என்பதுதான் தற்போது வெளியாகியுள்ள தகவல் சொல்லும் செய்தி. இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அமெரிக்காவின் உண்மை முகம் தெரிந்த சிலருக்கு இதுவொன்றும் புதிய செய்தியல்ல.

ஐநா பொதுச் சபையை அதிரவைத்த ஈரான் ஜனாதிபதி அஹமத் நிஜாத்

ஐக்கிய நாடுகளின் 66 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அமெரிக்காவின் நியூயோர்க் ஐநா தலைமையகத்தில் உலக பொருளாதார அபிவிருத்தி பற்றி உரையாடியுள்ளார் இங்கு உரையாற்றியுள்ள ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத் உலகம் தொடர்பான இஸ்லாமிய கோட்பாட்டை முன்வைத்து தனது உரையை தொடங்கியுள்ளார்.
பொதுச் சபையை கேள்வி கணைகளினால் அதிரவைதுள்ளார். உலகம் புதிய ஒழுங்கு முறை ஒன்றுக்கு வரவேண்டும். இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக நாடுகள் உதவ முன்வரவேண்டும் என்று உரையை ஆரம்பித்தவர் Video
ஏகாதிபத்தியத்தின் தயாரிப்பான தற்போது உள்ள ”உலக ஒழுங்கு” குறைபாடுகளை கொண்டது என்றும் வறுமையின் பிடியில் பல பில்லியன் மக்கள் வாடுவதாகவும் உலகின் பட்டினியால் தினமும் 20 ஆயிரம் பேர் மரணிப்பதாகவும் உலகின் வறுமையான மக்களில் 40 வீதமானவர்கள் உலக வருமானத்தின் 5 வீதத்தை மட்டும் பெறுவதாகவும் அதேவேளை 20 வீதமான செல்வந்தர்கள் உலக வருமானத்தின் 75 வீதத்தை பெற்றுகொள்வதாகவும் அமெரிக்காவில் உள்ள 10 வீதமான மக்களினால் உலகின் 80 வீதமான வளங்கள் கட்டுப்படுத்த படுவதாகவும் உலகின் 90 வீதமாகவுள்ள மக்களினால் வெறும் 10 வீதமான வளங்கள் கட்டுப்படுத்த படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உரையாற்றியுள்ள ஈரானிய ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் 66 ஆவது பொதுச் சபை உறுபினர்களை பார்த்து நண்பர்களே உலகில் பல மில்லியன் மக்களை ஆபிரிக்காவில் அவர்களின் வீடுகளில் இருந்து அடிமைகளாக பிடித்து சென்றவர்கள் யார் ? காலனித்துவதை சுதந்திர நாடுகள் மீது திணித்தவர்கள் யார்? 70 மில்லியன் மக்களை கொலை செய்த முதலாம் உலக மகா யுத்தம் , இரண்டாம் உலக மகா யுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தியவர்கள் யார் ? கொரிய வளை குடாவிலும் , வியட்நாமிலும் யுத்தத்தை விதைத்தவர்கள் யார்? உலகில் படுகொலை பயங்கரவாத்தை பரப்பியவர்கள் யார் ? நாடுகளை ஆக்கிரமிப்பவர்கள் யார்? உலகில் அணுகுண்டை பயன்படுத்தி அப்பாவிகளை படுகொலை செய்தவர்கள் யார்? யாருடைய பொருளாதாரம் யுத்தத்தை நடத்துவதிலும் , ஆயுத விற்பனையிலும் தங்கியிருக்கின்றது? ஈரானுக்கு எதிராக ஈராக்கை தூண்டி எட்டு வருட யுத்தத்தை திணித்தவர்கள் யார் ? அதன் பின்னர் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக கூறி ஈராக் மீது போர் தொடுத்தவர்கள் யார் ?
அறியப்படாத செப்டம்பர் 11 தாக்குதலை நடத்தி அதை சாட்டாக கொண்டு ஆப்கானையும் ஈராக்கையும் தாக்கி அதன் மூலம் மத்திய கிழக்கையும் அதன் வளங்களையும் அபகரிக்க திட்டமிட்டவர்கள் யார்? , உலக பொருளாதார கொள்கை வகுப்பை தமது கைக்குள் வைத்திருப்பவர்கள் யார்? எந்த அரசாங்கள் ஆயிரகணக்கான குண்டுகளை அடுத்த நாடுகள் மீது வீசியது ? , சோமாலியா போன்ற பட்டினி சாவை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு உணவு பொருட்களை அனுப்பாது பின்நிற்பது யார்? ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை கட்டுப்படுத்தி வைத்திருப்பது யார்? விடை அனைவருக்கும் தெளிவாக தெரியும் என்று தெரிவித்துள்ளார் .
ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத் உரையாற்றி கொண்டிருக்கும்போது இந்த முறையும் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேறி சென்றுவிட்டனர். அல்லது ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத்தின் கேள்வி கணைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தப்பி சென்றுள்ளனர்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

Main suspect in Rizana Nafeek case remandom,,23,9,2011

The main suspect who is alleged to have forged the passport and the Birth certificate of Rizana Nafeek to seek employment in Saudi Arabia was remanded by the Colombo Chief Magistrate on Tuesday.

The suspect Thambi Lebbe Abdul Salam was arrested by the CID in Beruwala on Monday on a tip off given to the police and when he was produced before the Magistrate the suspect was remanded till September 27 since the investigations were not concluded.

Earlier, two other suspects Shahul Hameed Abdul Latiff of 178, Shafie Nagar, Muttur and Pakeer Mohamed Wajurdeen of 37/3, Mosque Lane Colpetty, Colombo 3 were arrested and remanded allegedly for aiding and abetting Thambi Lebbe Abdul Salam to forge documents in order to obtain a passport to the under aged girl Rizana Nafeek of Muttur.

Rizana Nafeek is jailed in the death row in Saudi Arabia to be beheaded for killing her master’s infant child by choking him while bottle feeding. An appeal for her release from death sentence is under consideration of the Saudi authorities.

இலங்கையில் அதி கூடிய குடிகாரர்களை கொண்ட மாவட்டம் மட்டக்களப்பு

இலங்கையில் அதி கூடிய மது குடிகாரர்களையும் (மது அருந்துபவர்கள்), மாகாணத்தில் அதிகூடிய புற்றுநோயாளர்களையும் கொண்ட மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும்.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக பிரதேச சம்மேளன அலுவலர்களுக்கான நான்கு நாள் தலைமைத்துவ பயிற்சி நெறியின் இறுதி நிகழ்வு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் நேற்று 20.09.2011 செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாற தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.ஜீ.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பீ.பிரசாந்தன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் கே.தவராஜா உட்பட மன்றத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் பொருளாதார அபிவிருத்தியடைந்த மாவட்டமாக கட்டியெழுப்பப்படல் வேண்டும். இதற்காக ஒழுக்கமுள்ள ஒரு இளைஞர் சமுதாயத்தினை உறுவாக்கவேண்யுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மதுவுக்காக முப்பது கோடி செலவு செய்யப்படுகின்றது. இந் நிதி எமக்கு கிடைக்குமாயின் எமது மாவட்டம் கல்வியிலும் சுகாதாரத்திலும் சிறந்துவிளங்கும். யுத்தத்திலேயே பிறந்து அஞ்சி, அஞ்சி பல்வேறு சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாழ்ந்த எமக்கு கிடைக்கப்பெற்ற சமாதானத்தை பாதூகாத்து தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நான்கு நாள் தலைமைத்துவ பயிற்சியினை முடித்துக் கொண்டவர்களுக்கு இதன் பொது சான்றிதல்களும் வழங்கிவைக்கப்பட்டது.