கிலாத் சாலித்தின் விடுதலைக்கு பதிலாக 1,072 பலஸ்தீனியர்களை விடுவிப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து ஜெரூசலத்திலும் காஸாவிலும் குதூகலம்.
கைதிகள் பரிமாற்றம் தொடர்பான உடன்பாடு பற்றிய அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து காசா முனையிலும் ஜெரூசலத்திலும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகளைக் காணக்கூடியதாக இருந்தது.
நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட இவ்வுடன்பாட்டின் படி ஐந்து வருடத்துக்கும் அதிகமாக சிறைவைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேல் படை வீரரான கிலாத் சாலித்தின் விடுதலைக்குப் பகரமாக ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
2006ம் ஆண்டு எல்லை தாண்டிய தாக்குதல் ஒன்றின் போது சாலித் ஹமாசினால் பிடிக்கப்பட்டிருந்தார். சில நாட்களில் அவர் விடுவிக்கப்படுவார் என் அப்போது இஸ்ரேலியர்கள் தெரிவித்திருந்தனர்.
26 அமைச்சர்கள் ஆதரவாகவும் மூவர் எதிராகவும் வாக்களித்த பின்னிரவு அமைச்சரவைக் கூட்டமொன்றைத் தொடர்ந்து இஸ்ரேலிய அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியது.
சிரியாவின் டமாஸ்கஸ் நகரிலிருந்து தொலைபேசியில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட உரை ஒன்றில் ஹமாஸ் தலைவர் காலித் மெஷால் இந்த விடயத்தை உறுதி செய்தார். அவ்வுரையில் “இது நாம் பெருமைப்பட வேண்டிய தேசிய அடைவாகும்” என்றார் அவர்.
இவ்வுரையைத் தொடர்ந்து காசாவின் இடம்பெயர்ந்தோர் முகாமான ஜபலியாவின் வீதிகளில் திரண்ட பலஸ்தீனியர்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தும் முகமாக துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்ததையும் கார்களின் Horn ஒலிகளை எழுப்பியதையும் கேட்க முடிந்ததாக அல் ஜசீறாவின் நிகோல் ஜோன்ஸ்டன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக