கடாபியின் இழப்பானது முஸ்லிம் நாடுகளுக்கு மாத்திரமன்றி உலகத் துக்கே ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டார். கடாபியின் கொலை தொடர்பாக வெளியிட்டிருக்கும் அனுதாபச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப் பிட்டுள்ளார். கடாபி சிறந்ததொரு வீரர் மாத்திரமன்றி, ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய முக்கியமானதொரு சிறந்த தலைவர். இவரின் இழப்பானது பேரிழப்பாகுமெனவும் அலவி மெளலானா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடாபியின் இழப்பைத் தொடர்ந்து, முஸ்லிம் நாடுகள் யாவும் ஐக்கியப்பட்டு ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டுமென்ற அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் சீ. ஐ. ஏ.யினரின் நடவடிக்கையாலேயே கடாபி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை நாம் கண்டிக்கின்றோம்.
இறைவனுடைய பெயரால் முஸ்லிம் நாடுகளிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக